கோப்புப் படம் 
சென்னை

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) இரவு 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06004) செப். 1-ஆம் தேதி பெங்களூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் மங்களூரு சென்ட்ரலிலிருந்து காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஆக. 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT