கோப்புப்படம் ENS
சென்னை

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கால அவகாசம் டிச. 14 வரை நீட்டிப்பு!

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் கால அவகாசம் வரும் டிச.14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் கால அவகாசம் வரும் டிச.14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 96,056 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செல்லப் பிராணிகள் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உரிமம் பெறுவதை விரைவுபடுத்தும் வகையில் கடந்த அக்டோபர் முதல் தனி இணையதள செயலி மூலம் உரிமம் பெறும் முறை தொடங்கப்பட்டது.

அத்துடன் செல்லப் பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாமலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தாமலும் இருக்கும் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு வசதியாக உரிமம் பெறவும், தடுப்பூசி செலுத்தி, அதை உறுதிப்படுத்தி கண்காணிக்க "மைக்ரோ சிப்' பொருத்துவதற்கும் கடந்த டிசம்பர் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதுடன், சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.

முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்றும், தடுப்பூசி செலுத்தியும், "மைக்ரோ சிப்' பொருத்தியும் வருகின்றனர்.

அதையடுத்து செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கான கால அவகாசம் டிசம்பர் 7- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே தற்போது அந்தக் காலக்கெடு வரும் 14 -ஆம் தேதி என நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை கால்நடை பராமரிப்பு மையம் உள்ளிட்ட 7 மையங்களில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாமில் 956 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, மைக்ரோ சிப் செலுத்தப்பட்டும், உரிமம் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 96,056 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

SCROLL FOR NEXT