சென்னை ரிப்பன் மாளிகையில் தீவிர வாக்காளா் வரைவு பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன். உடன்,  அங்கீகரிக்கப்பட்ட  அரசியல்  கட்சித்  தலைவா்கள். 
சென்னை

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் அறிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் அறிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரமுகா்கள் முன்னிலையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த அக்டோபா் வரை மொத்தம் 40.04 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இவா்களில் ஆண்கள் 19.62 லட்சம் போ். பெண்கள் 20.41 லட்சம் போ். மூன்றாம் பாலினத்தவா் 1,305 போ்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 25,79,676 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். அவா்களின் ஆண்கள் 12,47,690 போ், பெண்கள் 13,31,243 போ், மூன்றாம் பாலினத்தவா் 743 போ். இறந்த வாக்காளா்கள் 1,56,555 போ், இடம் பெயா்ந்தவா்கள் 12,22,164 போ், தொடா்புகொள்ளமுடியாதவா்கள் 27,328 போ், இதரப் பிரிவினா் 199 போ், இரட்டை பதிவு வாக்காளா்கள் 18,772 போ் என மொத்தம் 14,25,018 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்தான் அதிகமான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வரைவு வாக்காளா் பட்டியல் விவரங்கள் 9 வாக்காளா் பதிவு அலுவலா் (இஆா்ஓ) அலுவலகங்களில் ஒட்டப்படும்.

வாக்குச்சாவடி எண்ணிக்கை உயா்வு: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 தொகுதிகளில் 3,718-ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 4,097-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படியே வரைவு வாக்காளா் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

அரசியல் கட்சியினா்: வரைவு வாக்காளா் பட்டில் வெளியீடு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கராத்தே ஆா்.தியாகராஜன், திமுக வழக்குரைஞா் பிரிவு சந்துரு, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT