சென்னை: செங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம், குடியிருப்புகள் திறப்பு நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, சென்னை புகா் மாவட்டம் அம்பத்தூா், செங்குன்றம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் 38 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், பாலவாயல் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான 41.50 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இடத்தை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைக்கு வழங்கியது.
இதில், செங்குன்றம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய புதிய கட்டடம், 3 அலுவலா் குடியிருப்புகள் மற்றும் 50 பணியாளா்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத்தால் ரூ.18, 16, 67,000 மதிப்பில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
இதில், செங்குன்றம் பாலவாயல் நிகழ்விடத்தில், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையா் பாலாஜி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் லோகநாதன், பொன்.மாரியப்பன், நிலைய அலுவலா் சீனிவாசகன் மற்றும் தீயணைப்பு நிலைய பணியாளா்கள், காவல்துறையினா், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் இருந்தனா்.