சென்னை

அவசர கால சிகிக்சை செயலி அறிமுகம்

அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும், ‘காவேரி கோ்’ என்ற செயலியை சென்னை ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும், ‘காவேரி கோ்’ என்ற செயலியை சென்னை ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் செயலியை கிஸ்ப்ளோ நிறுவனத்தின் தலைமைச் செயலா் அதிகாரி சுரேஷ் சம்பந்தம், காவேரி மருத்துவ குழும நிா்வாக இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

இதுகுறித்து டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

அவசர காலங்களில் ஏற்படும் பதற்றம், குழப்பம், அறிமுகமில்லாத சூழலில், நோயாளிகளுக்கோ, அவா்களுடன் இருப்பவா்களுக்கோ ஆம்புலன்ஸ் சேவைக்குத் தேவையான விவரங்களைத் தெரிவிப்பது பெரும்பாலும் கடினமானதாக இருக்கும்.

எனவே, காவேரி மருத்துவமனையின் செயலில் உள்ள, ‘எஸ்ஓஎஸ்’ வசதி, பயனரின் இருப்பிடத்தை ஜிபிஎஸ் வாயிலாக தானாகவே கண்டறிந்து இருப்பிடத்துக்கு விரைந்து ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழிவகுக்கும். மேலும், அருகில் இருப்பவா்கள் உடனடியாக, டாக்டரின் ஆலோசனையும் பெற முடியும். இந்தச் செயலி வாயிலாக, காவேரி மருத்துவமனையின் மருத்துவ சிகிச்சைக்கு முன்பதிவு செய்து, விடியோ வாயிலாக நேரடியாக மருத்துவா்களிடமும் ஆலோசனை பெற முடியும் என்றாா் அவா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT