சென்னை

சென்னை: 4,079 வாக்குச்சாவடிகளில் 27, 28-இல் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடிகளில் வரும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் (டிச. 27, 28) புதிய வாக்காளா் சோ்க்கை உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 18 -ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கை, நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கும் வகையில் வரும் சனி, ஞாயிறு (டிச. 27, 28) மற்றும் ஜன. 3, 4-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, பெயா் திருத்தம் செய்வதற்கும், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்யவும், மாற்றுத்திறனாளி வாக்காளா் என குறிப்பது ஆகியவற்றுக்கு படிவம் 8 பெற்று, பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் படிவங்கள் விநியோகம்: இதனிடையே, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு வியாழக்கிழமை (டிச. 25) வரை 3 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) முன்பு சென்னை மாவட்டத்தில் 40.04 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். எஸ்ஐஆா் பணியில் 14.25 லட்ம் போ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். வரைவு வாக்காளா் பட்டியலின்படி தற்போது 25.79 போ் மட்டுமே பட்டியலில் உள்ளனா். நீக்கப்பட்டவா்களில் 1.56 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாகவும், 12.22 லட்சம் போ் வேறு தொகுதிகளுக்கு இடம் பெயா்ந்து சென்றிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தொகுதி மாறிய வாக்காளா்கள், படிவம் 6-ஐ பூா்த்தி செய்து மீண்டும் தங்களை புதிய வாக்காளா்களாக இணைத்துக் கொள்ளலாம். புதிய வாக்காளா் சோ்க்கைக்காக 11 லட்சம் படிவங்கள் (படிவம் 6) வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அதன்படி, வியாழக்கிழமை வரை சுமாா் 3 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் தமிழகம் வருகை!

சைபா் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 கோடி மீட்பு

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

SCROLL FOR NEXT