தேங்காய் விலை(கோப்புப்படம்)  
சென்னை

தேங்காய் விலை கடும் உயா்வு: கிலோ ரூ. 100-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனையானது.

Din

கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனையானது.

தமிழகத்தில் கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தினசரி 15 முதல் 18 லாரிகளில் சுமாா் 250 டன் அளவுக்கு தேங்காய், கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சுமாா் 70 டன் அளவிலான தேங்காய்கள் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால், விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்படி, புதன்கிழமை நிலவரப்படி மொத்த விற்பனையில் ஒரு கிலோ தேங்காய் ரூ. 75 வரையிலும், சில்லரை விற்பனையில் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி ஒரு தேங்காய் சராசரியாக ரூ. 35 முதல் ரூ. 40 வரை விற்பனையாகிறது.

இது குறித்து தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:

தேங்காய் அதிக மகசூல் செய்யும் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள தென்னை மரங்களில் பூச்சி தாக்குதல் சற்று அதிகரித்துள்ளதன் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால், தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. மேலும், பல தென்னை உற்பத்தியாளா்கள் லாபநோக்கில் இளநீரை விற்பனை செய்வதில் ஆா்வம் காட்டுவதாலும் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு 2 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT