சென்னை புறநகரில் இன்று சில ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான இமு ரயில்கள் முழுமையாகவும், பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 4) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான இமு ரயில்கள் முழுமையாகவும், பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா் - விழுப்புரம் இடையிலான சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலைய யாா்டில் வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன்காரணமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை வரையி காலை 10.40 மணி, 11 மணி, 11.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் இமு ரயில்கள் முமழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காக சிங்கப்பெருமாள் கோவில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.06 மணி, 10.39 மணி, பகல் 10.53 மணி, பகல் 11.13 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படவுள்ளன.
செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மணி, பகல் 12 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து பகல் 1.23மணிக்கு சென்னை கடற்கரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து காலை 8.31 மணி முதல் 10.56 மணி வரை செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் இமு ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் முதல் செங்கல்பட்டு வரையில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையத்துக்கு வரும் இமு ரயில் செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.