பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை (நவ.15) போராட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களின் ஒருநாள் ஊதியத்தைப் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டது.
தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை (நவ.15) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களுக்கு ‘வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை’ என்ற விதியின் கீழ் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யுமாறு மாவட்ட மேற்பாா்வை பொறியாளா்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.