சென்னை

48 மருத்துவ இடங்கள் காலி: என்எம்சி அனுமதி பெற்று நிரப்ப நடவடிக்கை

48 மருத்துவ இடங்கள் காலி: என்எம்சி அனுமதி பெற்று நிரப்ப நடவடிக்கை

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நான்கு கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த நிலையில், 48 இடங்கள் நிரம்பாமல் உள்ளதால் அவற்றை நிரப்ப சிறப்பு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,736 எம்பிபிஎஸ் இடங்களும், 530 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இதற்கான நான்கு கட்ட கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெற்றது.

இதன் முடிவில் 23 எம்பிபிஎஸ் இடங்களும், 25 பிடிஎஸ் இடங்களும் நிரம்பாமல் உள்ளன. அவற்றை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநில மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு செயலா் டாக்டா் லோகநாயகி கூறியதாவது:

சென்னை மற்றும் கடலுாா் அரசு மருத்துவ பல் மருத்துவக் கல்லூரிகளில் 3 பிடிஎஸ் இடங்கள் உள்பட 48 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் ஒரு எம்பிபிஎஸ் இடமும் உள்ளது. அவற்றை சிறப்புக் கலந்தாய்வு மூலம் நிரப்ப அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த சுற்று கலந்தாய்வு நடத்தப்படும் என்றாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT