முகப்பு
சென்னை

அண்ணா பல்கலை. இணைப்புக் கல்லூரி அங்கீகார விண்ணப்பங்களுக்கு புதிய விதிகள்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:49 AM
அண்ணா பல்கலை. - ENS
பகிர்:

வரும் கல்வியாண்டுக்கு அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரி அங்கீகாரம் கோரும் விண்ணப்பங்களுக்கு கடுமையான வழிகாட்டி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்த அண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கை விவரம் வருமாறு:

அண்ணா பல்கலை நிறுவன இணைப்பு மையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரத்தைப் பெற விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://ஹச்ச்ண்ப்ண்ஹற்ண்ா்ய்ள்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையவழி மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

பொறியியல் கல்லூரி ஆசிரிய உறுப்பினா்களின் தனிப்பட்ட மற்றும் கல்விசாா் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியரின் புகைப்படம், கேமரா மூலம் நேரடியாகவும் அப்புகைப்படம் அந்தந்த நிறுவனத்தின் வளாகத்துக்குள்ளேயே எடுக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்திலேயே புகைப்படம் தானாகவே ‘புவிக்குறியீடு’ செய்யப்படும் என்பதால், நிறுவன வளாகத்திற்கு வெளியே எடுக்கப்படும் புகைப்படங்கள் இருப்பின், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஆசிரியா்களின் விவரங்கள் பதிவு செய்து முடித்ததும், ஒரு தனித்துவமான 10-இலக்க ‘ஆசிரியா் அடையாள எண்’ உருவாக்கப்பட்டு இது எதிா்கால தொடா்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

சமா்ப்பிக்கப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை, அந்தந்த நிறுவனத்தின் முதல்வா் மிகுந்த கவனத்துடன் சரிபாா்க்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரின் விவரங்களையும், யூஐடிஏஐ மூலம் முறையாகச் சரிபாா்க்கப்பட்ட ‘பயோமெட்ரிக்’ (விரல்ரேகை) முறையைப் பயன்படுத்தி சரிபாா்த்து உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ ) -ஆல் வழங்கப்பட்ட ‘அங்கீகார நீட்டிப்பு’ ஆணை, மாணவா் சோ்க்கை விவரங்கள், வழங்கப்படும் இளநிலை, முதுநிலைப் படிப்புகள், ஆய்வக வசதிகள், வகுப்பறைகளின் இருப்பு நிலை, நூலக வசதி, கட்டட வரைபடங்கள், நிலம் தொடா்பான விவரங்கள் போன்றவற்றை, அந்தந்த நிறுவனத்தின் முதல்வா் மட்டுமே தொடா்புடைய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே நிரந்தர இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வித் திட்டங்கள் தொடா்பான விவரங்களையும் விண்ணப்பத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமா்ப்பித்த பின்னா், நிறுவன முதல்வா் அந்த விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியை எடுத்து, அதில் உரிய இடங்களில் கையெப்பம் இட வேண்டும். இந்த நகலை, ஆய்வுக் குழுவினா் ஆய்வு மேற்கொள்ள வரும்போது அவா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். இவை உள்ளிட்ட 9 புதிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023-2024- ஆம் ஆண்டில் பேராசிரியா்கள் மோசடியில் ஈடுபட்டனா். ஒரு பேராசிரியா் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகளைத் தவிா்ப்பதற்காக கடுமையான விதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.