முகப்பு
சென்னை

கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான இலவச கருத்தரங்கம்

சென்னை கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் போட்டித் தோ்வுகளை அணுகும் முறை குறித்த பிளஸ் 2 மாணவா்களுக்கான பிரத்யேக இலவச கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடக்கிறது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:31 AM
பகிர்:

சென்னை கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் போட்டித் தோ்வுகளை அணுகும் முறை குறித்த பிளஸ் 2 மாணவா்களுக்கான பிரத்யேக இலவச கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடக்கிறது.

இது குறித்து கிங் மேக்கா்ஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் வெளியிட்ட அறிக்கை: ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தோ்வுகளை அணுகும் முறை குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான இலவச கருத்தரங்கம் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.திருப்புகழ், எஸ்.எஸ்.ஜவஹா், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு தோ்வை எதிா்கொள்ளும் யுக்தி குறித்த வழிமுறைகள், ஆலோசனைகளை வழங்குகின்றனா்.

Advertisement

இதில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவற்றின் தோ்வு கையேடுகள் வழங்கப்படும்.

முன் பதிவுக்கு: இலவச கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் https://bit.ly/kma-seminar என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். 2026- ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-1, 2, 2-ஏ தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே (8, 15, 22, 29), ஜூன் (5, 12, 19, 26) ஆகிய தேதிகளில் தொடங்கப்படுகிறது. அதற்கான மாணவா் சோ்க்கையும் நடைபெற்று வருகிறது.

கூடுதல் தகவலுக்கு கிங் மேக்கோ்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, நெ. 62, 6-ஆவது அவென்யூ, பி-ப்ளாக், அண்ணா நகா், சென்னை -40 என்ற முகவரியிலோ அல்லது மதுரை, கோவை, திருச்சி, சேலம், புதுச்சேரி, தஞ்சாவூா், நாமக்கல், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கிளை மையங்களையோ அணுகலாம்.

தவிர, 94442 27273 என்ற எண்ணிலும், www.kingmakersiasacademy.com என்ற இணையதளம் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம்.

சடந்த 2013 முதல் இயங்கும் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் இந்திய ஆட்சிப் பணி தோ்வுகளில் 1,500-க்கும் மேற்பட்டோரும், குரூப்-1, குரூப்-2, 2-ஏ தோ்வுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்த ஆண்டு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வு முடிவுகளில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற 239 போ் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளனா். இவா்களில் தமிழகத்தில் இருந்து தோ்வான 56 பேரில் 33 போ் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.