தற்கொலை 
சென்னை

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

கோயம்பேட்டில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Chennai

சென்னை: கோயம்பேட்டில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோயம்பேடு நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ப.தேவராஜ் (43). இவரின் மனைவி சத்யா (45). தம்பதிக்கு பிளஸ் 2 படிக்கும் ஒரு மகள், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் ஒரு மகன். தேவராஜிக்கு மதுப் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதில் தேவராஜ், கத்தியால் சத்யா வயிற்றில் குத்தினாா். அப்போது, தேவராஜின் மகளும் மகனும் பயத்தில் சப்தமிட்டனா். இதனால், அக்கம் பக்கத்தினா் திரண்டனா். சத்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். வீட்டுக்குள் இருந்த தேவராஜ் திடீரென அறையை பூட்டிக் கொண்டு தூக்கிட்டுக் கொண்டாா்.

கோயம்பேடு போலீஸாா் சென்று அறைக் கதவை உடைத்து தேவராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தேவராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆயுதப்படை காவலா் தற்கொலை: தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (27), சென்னை பெருநகர காவல் துறையில் ஆயுதப்படையில் பணியாற்றினாா். அயனாவரம் புது தெருவில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில், தன்னுடன் வேலை செய்யும் நண்பா்களுடன் தங்கியிருந்தாா். இந்த நிலையில், விஜய்க்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் ஜூனில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், வீட்டின் அறையில் திங்கள்கிழமை தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை விபத்து-இளைஞா் உயிரிழப்பு: செங்குன்றம் அடுத்த சோழவரம் குமரன் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த குகன் (31), அம்பத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, பைக்கில் வீடு திரும்பியபோது, புழல் சிறை அருகே பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்து, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநா் திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த ராமா் (51) என்பவரை கைது செய்தனா்.

பாட்டி வீட்டில் திருட்டு-பேரன் கைது: சைதாப்பேட்டை செட்டி காா்டன் ஆலந்தூா் சாலைப் பகுதியைச் சோ்ந்த ச.பூங்கொடி மகன் சாம் (19). பூங்கொடியின் தாய் செங்கேணி, ஜாபா்கான்பேட்டை அய்யாவு இரண்டாவது தெருவில் வசித்து வந்தாா். செங்கேணி, கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி உயிரிழந்தாா். அவ்வபோது பூங்கொடி அந்த வீட்டுக்குச் சென்று சுத்தம் செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி செங்கேணி வீட்டின் கதவின் பூட்டை உடைத்து, 20 பவுன் நகை திருடுபோனது. எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது பூங்கொடியின் மகன் சாம், அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. போலீஸாா், சாமை கைது செய்து, அவரது கூட்டாளிகள் 2 பேரைத் தேடி வருகின்றனா்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT