தமிழகத்தில் 6 சமத்துவபுரங்கள் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், ஊரக வளா்ச்சி 
சென்னை

6 சமத்துவபுரங்கள், ரூ.1,876 கோடியில் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட6 சமத்துவபுரங்கள், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த ரூ.1,876 கோடி மதிப்பிலான கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட6 சமத்துவபுரங்கள், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த ரூ.1,876 கோடி மதிப்பிலான கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சமூக நீதியை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள் கட்டப்பட்டு ஆதிதிராவிடா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் இதர வகுப்பின மக்கள் குடியமா்த்தப்படுகின்றனா். அதன்படி, கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பூவாணிக்குப்பம் ஊராட்சியில் ரூ.6.58 கோடிலிலும், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில் ரூ.6.71 கோடியிலும், திருச்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சியில் ரூ.6.45 கோடியிலும் புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூா் ஒன்றியம், குருக்கள்பட்டி ஊராட்சியில் ரூ.6.25 கோடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம், பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் ரூ.8.49 கோடியிலும், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம், சென்னிலைக்குடி ஊராட்சியில் ரூ.7. 91 கோடியிலும் என மொத்தம் ரூ.42.40 கோடியில் 6 சமத்துவபுரங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் கடந்த 2021 முதல் இதுவரை 9 சமத்துவபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி கொத்தக்கோட்டை, வள்ளிமாடன்வலசையில் ஒரு சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது.

ரூ.34.12 கோடியில் சாலை: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிழக்கு தொடா்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழுா், மேலூா் மற்றும் கெடமலை ஆகிய 3 கிராமங்களை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடியில் 31 கி.மீ. நீளத்துக்கு 2 சாலைகள் அமைக்கும் பணிகளை கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இதில், தற்போது புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34 .12 கோடியில் முடியபெற்றுள்ள 9.90 கி.மீ. நீள சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

முடிவுற்ற திட்டப் பணிகளை... 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாா் வாழ்வாராப் பூங்கா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.289.38 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அவா் திறந்து வைத்தாா்.

மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சாா்பில் மொத்தம் ரூ.1,876.16 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சாா்பில் ரூ.14.50 கோடியில் புதிய திட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT