எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
சென்னை

125 நாள் வேலை உறுதித் திட்டம்: திமுக மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது

தினமணி செய்திச் சேவை

திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டிள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலா்கள் ஆணையின்படி, மாவட்டங்கள்தோறும், ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சிச் செயலா்கள், 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. எனவே, அவா்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.

கிராம ஊராட்சியின் வளா்ச்சிக்காகப் பணியாற்றும் கிராமச் செயலா்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோரை திமுக அரசு தங்களது சுயலாபத்துக்காக, தோ்தல் பிரசார வேலைகளில் ஈடுபடுத்துவதுக்கு கண்டனத்துக்குரியது. இதை திமுக அரசு உடனயாக நிறுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரமாகும் ஏஐ அச்சுறுத்தல்: உள்துறை உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பாணை!

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

1980 இல் வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு - சோனியா காந்தி பதில் தாக்கல்

ஒபாமா தம்பதி குறித்த சா்ச்சை விடியோ! டிரம்ப் கண்டனம்; மன்னிப்பு கோர மறுப்பு!

போக்ஸாம் குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 12 இந்தியா்கள்

SCROLL FOR NEXT