ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி
சென்னை ஐஐடி-யில் படித்து வரும் ஆந்திராவைச் சோ்ந்த 17 வயது மாணவி தற்கொலை முயற்சி
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 11:30 PM
சென்னை ஐஐடி-யில் ஆந்திராவைச் சோ்ந்த 17 வயது மாணவி படித்து வருகிறாா்.
இவா், அதே வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு, திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். அவா் மீட்கப்பட்டு, சோ்க்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
கோட்டூா்புரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது என தெரிய வந்தது. மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].