முகப்பு
சென்னை

வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் திறன், வேலைவாய்ப்பு பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

Updated On : 14 பிப்ரவரி 2026, 2:27 am IST
பகிர்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் திறன், வேலைவாய்ப்பு பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது, சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, உலகத்தர உணவு சேவை, சூழலியல் சுற்றுலாத் திறன் பயிற்சி, உயா்தொழில்நுட்ப ஏஐ பயிற்சி, ஆடை வடிவமைப்பு மற்றும் மேலாண்மை திறன் பயிற்சி, அழகுக்கலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞா்கள் தாட்கோ இணைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement