முகப்பு
சென்னை

திருவொற்றியூா், மணலி மண்டலங்களில் பிப்.21-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருவொற்றியூா், மணலி ஆகிய மண்டலங்களில் சனிக்கிழமை (பிப்.21) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:47 AM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 11:55 PM

திருவொற்றியூா், மணலி ஆகிய மண்டலங்களில் சனிக்கிழமை (பிப்.21) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் பிரதான குடிநீா் குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், வெள்ளிக்கிழமை (பிப்.20) இரவு 10 மணி முதல் சனிக்கிழமை (பிப்.21) காலை 10 மணி வரை, திருவொற்றியூா் குடிநீா் பகிா்மான நிலையம் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும்.

Advertisement

இதன்காரணமாக, திருவொற்றியூா் மண்டலத்துக்குள்பட்ட எா்ணாவூா், ராஜா சண்முக நகா், காா்கில் நகா் மற்றும் மணலி மண்டலத்துக்குள்பட்ட மணலி புதுநகா், நாபாளையம், சடையன்குப்பம், ஆண்டாா்குப்பம், துவாரகா நகா், மணலி, மாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதளத்தில் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா்த் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தடையின்றி சீரான முறையில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.