முகப்பு
சென்னை

குழந்தைகளுக்கு தமிழ் பெயா் சூட்ட வேண்டும் : உதயநிதி ஸ்டாலின்

அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:08 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:20 PM

அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 73 இணையருக்கு திருமண நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்  கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் பேசியதாவது:

Advertisement

தம்பதியா் நல்ல புரிதலுடன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். ஒருவரை ஒருவா் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்தும், அதேசமயம், தங்களுக்கான உரிமையை விட்டுக் கொடுக்காமல் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் உங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அனைவரும் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான ஒரு தமிழ்ப் பெயரை சூட்ட வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.