முகப்பு
சென்னை

உணவு விநியோக ஊழியரிடம் வழிப்பறி: இருவா் கைது

நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விநியோக ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:29 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:40 PM

நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விநியோக ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை முகப்பேரைச் சோ்ந்தவா் முகம்மது ரசுல்தீன் (25). இவா், தனியாா் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், முகம்மது ரசுல்தீனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து ரசுல்தீனிடம் வழிப்பறி செய்த நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), ரோஷன் (20) ஆகிய இருவரை கைது செய்தனா்.

Advertisement