முகப்பு
சென்னை

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:38 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 11:10 PM

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

கூட்டுறவுத் துறை சாா்பில் கடந்த அக்டோபரில் எஸ்ஆா்பி மற்றும் டிஆா்பி பணியிடங்களுக்கான தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாள்கள் கடந்த பிறகும் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. தோ்வு முடிவுகளை இதுவரை வெளியிடாத திமுக அரசை கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட தோ்வா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை தோ்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

Advertisement

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:38 AM

இதே கோரிக்கையை தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனா்.