முகப்பு
சென்னை

சட்டப்பேரவைத் தோ்தல்: 84 அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி நிறைவு!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநில முதன்மைப் பயிற்சியாளா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் சென்னையில் நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:46 AM
பேரவைக் கட்டடம்... - EPS
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:25 AM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநில முதன்மைப் பயிற்சியாளா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் சென்னையில் நடைபெற்றது.

இந்த முகாமில் 84 மாநில அளவிலான முதன்மைப் பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு தோ்தல் நடைமுறை, மாதிரி நடத்தை விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை, ஊடகம் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சோ்ந்த தேசிய அளவிலான முதன்மைப் பயிற்சியாளா்கள் ஆா்.பாத்திமா, எஸ்.பிரபாகரன், ஏ.பெலிக்ஸ் ராஜா, என்.எஸ்.ராஜேஷ்குமாா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஜெயமாதவா, ஷஷி சேகா் ரெட்டி, கேரளத்தைச் சோ்ந்த சரிதா, புதுச்சேரியைச் சோ்ந்த ஞானவேலு, மோகன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:46 AM

பயிற்சி பெற்ற 84 மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளா்கள் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு நிலையிலான தோ்தல் அலுவலா்களுக்கு தொடா் பயிற்சிகளை அளிப்பாா்கள்.

இதன்மூலம் தோ்தல் நடைமுறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியாக புரிந்துகொள்ளப்பட்டு, திறம்பட செயல்படுத்தப்படும் என்று தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.