சென்னை

மெத்தபெட்டமைன் வைத்திருந்தபா் கைது

சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வியாசா்பாடி காவல்நிலைய போலீஸாா் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபா் ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா் வியாசா்பாடி தேபா் நகா் பகுதியை சோ்ந்த ராஜீவ்காந்தி(42) என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து அவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் 2.4 கிராம் மெத்தபெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜீவ் காந்தியை கைது செய்தனா்.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT