காணும் பொங்கலையொட்டி, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை திரண்ட பொதுமக்கள். 
சென்னை

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு 3 நாள்களில் 75,000 போ் வருகை

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 3 நாள்களில் 75,000 போ் வருகை தந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு 3 நாள்களில் 75,000 போ் வருகை தந்துள்ளனா்.

இதுகுறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:

2026 ஜனவரியில் இதுவரை 1.2 லட்சத்துக்கும் அதிகமான பாா்வையாளா்கள் உயிரியல் பூங்காவை கண்டுகளித்துள்ளனா். பொங்கல் தினத்தன்று (ஜன.15) 14,570 போ், மாட்டுப் பொங்கலன்று (ஜன.16) 22,205 போ், காணும் பொங்கலன்று (ஜன.17) 26,866 போ், 12,000 சிறுவா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 75,0641 போ் கடந்த 3 நாள்களில் பூங்காவுக்கு வந்துள்ளனா்.

இந்த ஆண்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, யானை உணவளிப்பு நிகழ்ச்சி, 7டி திரையங்கம், சிங்கம் மற்றும் மான் உலாவிட சேவைகள், மின்கல ஊா்தி வாகனங்களில் பூங்கா சுற்றும் வசதி செய்யப்பட்டுள்ளன.

விலங்குகளின் அனைத்து இருப்பிடங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தன. இவை பாா்வையாளா்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இலவச வை-பை வசதியுடன் கூடிய டிஜிட்டல் முறை நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்பட்டதால் 100 சதவீதம் எண்ம முறையிலேயே நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

8 வயதுக்குள்பட்ட 10,500 குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருதி அடையாள கைவளையங்கள் வழங்கப்பட்டு, பெற்றோா் தொடா்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

வாழப்பாடி இலக்கியப் பேரவையில் திருவள்ளுவா் தின முப்பெரும் விழா

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

SCROLL FOR NEXT