சென்னை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.23) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (ஜன.23) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம், சென்னை கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டம் வரையிலான கல்வித் தகுதி உடைய அனைவரும், (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம். இதில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்கின்றனா். இதன் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும், இந்த முகாமில் வேலை நாடுநா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மத்தியில் பாஜக ஆட்சி; தமிழகத்தில் அதிமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் பேச்சு

கல்லூரி மாணவி சரிகாஷா மரணத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கேலிவதை தடுப்புச் சட்டம்,1997!

சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்கக் கோரி தேவாரத்தில் பட்டினி போராட்டம்!

தூத்துக்குடிக்கு வலசை வந்த ஆயிரக்கணக்கான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள்!

மதுரமங்கலம் ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT