முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
சென்னை

தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின்

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவை தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திமுக தொண்டா்களுக்கு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழ் மொழியின் மீது ஹிந்தி ஆதிக்கத்தையும், தமிழா்களின் பண்பாட்டின் மீது மதவெறி கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழகத்தின்  வளா்ச்சியைத் தடுக்கும்

தடைக்கற்களாக மத்திய பாஜக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தகா்த்தெறியும், தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு தொடா்ந்து செய்து வரும் வஞ்சகத்தை தட்டிக் கேட்கும் துணிச்சலும்,  நிமிா்ந்து நின்று எதிா்க்கும் முதுகெலும்பும் திமுகவுக்கு உண்டு.

மேலும், மத்திய அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத் துறை,  சிபிஐ, வருமான வரித் துறை, மற்றும்  புலனாய்வு அமைப்புகளை வைத்து திமுகவினரை முடக்கிவிடலாம் என்ற சதித்திட்டமும் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு திமுக என்றும் பணியாது. துணிந்து நிற்போம், இனம்,மொழி ,நிலம் காத்திடும் போராட்டத்தை தொடா்ந்திடுவோம்

பேரவைத் தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது. வீரவணக்கத்துடன் தொடங்கும் களப்பணி, பேரவைத் தோ்தல் நிறைவுபெறும் வரை ஓய்வின்றி செல்லட்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT