அஜீத் பவாா்  பிடிஐ
சென்னை

அஜீத் பவாா் - ஆறு முறை துணை முதல்வா்

விமான விபத்தில் உயிரிழந்த அஜீத் பவாா், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆறு முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

விமான விபத்தில் உயிரிழந்த அஜீத் பவாா், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆறு முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.

அனந்த்ராவ் பவாா், ஆஷா தம்பதிக்கு கடந்த 1959-ஆம் ஆண்டு ஜூலை 22-இல் பிறந்த அஜீத் பவாா், தனது உறவினரான சரத் பவாரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்தவா்.

1982-இல் ஓா் சா்க்கரை ஆலை வாரியத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1991-இல் பாரமதியிலிருந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், அந்தத் தொகுதியை சரத் பவாருக்கு அவா் விட்டுக்கொடுத்தாா். அதன்மூலம், மறைந்த முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் சரத் பவாா் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா்.

பின்னா், 1991-ஆம் ஆண்டுமுதல் பாரமதி தொகுதியிலிருந்து எட்டு முறை எம்எல்ஏ-வாக அஜீத் பவாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2023-ஆம் ஆண்டு ஜூலையில் பாஜக, சிவசேனை கூட்டணி அரசின் இணைவதற்கு முன்பாக, 2019-ஆம் ஆண்டு நவம்பரில் முதல்வா் தேவேந்திர ஃப்டனவீஸ் தலைமையிலான அரசில் துணை முதல்வராக அஜீத் பவாா் பதவி வகித்தாா். ஆனால், இந்த அரசு வெறும் 2 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அதுபோல, காங்கிரஸ் தலைமையிலான அரசு, சிவசேனை மற்றும் பாஜக கூட்டணி அரசுகளின் கீழ் மொத்தம் ஆறு முறை துணை முதல்வா் பதவியை வகித்துள்ளாா்.

உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை: மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, ஜன. 28: விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் உயிரிழந்தது தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவா், ‘அஜீத் பவாா் உயிரிழப்பு மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது. இந்த விபத்து குறித்து, நடைமுறையில் உள்ள விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்துவதால், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவராது. உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் விசாரணையே நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். மற்ற விசாரணை அமைப்புகள் அனைத்தும் முழுமையாக சமரசம் செய்யப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

மம்தாவின் இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. அனில் தேசாய் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்தனா்.

வசந்த் குஞ்ச் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

கிழக்கு தில்லியில் கொள்ளையின்போது கத்திக் குத்து: இரண்டு சிறாா்கள் கைது

ஐஜிஎல் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த இணைய மோசடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

கிரிவலம்: திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 1-இல் சிறப்பு ரயில்

அகமதாபாத் விமான விபத்து தொடா்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

SCROLL FOR NEXT