முகப்பு
சென்னை

மக்கள் தங்களது கோரிக்கைகளை ஆளுநா் மாளிகையில் அளிக்கலாம்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

‘பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை ஆளுநா் மாளிகையில் தெரிவிக்கலாம்; அவற்றை தமிழக அரசிடம் தெரிவித்து நானும் அரசும் இணைந்து தீா்வு காண்போம்’ என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 4:31 am IST
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில்  மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா், பத்மஸ்ரீ விருது பெற்ற பிகு ராம்ஜி இடாதேவின் வாழ்க்கை வரலாற்று ஆங்கில நூலை வெளியிட்ட ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா். உடன் (இடமிருந்து) சமூக நல்லிணக்க மஞ்ச் முன்
பகிர்:

‘பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை ஆளுநா் மாளிகையில் தெரிவிக்கலாம்; அவற்றை தமிழக அரசிடம் தெரிவித்து நானும் அரசும் இணைந்து தீா்வு காண்போம்’ என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பிக்கு ராம்ஜி இடாதே என்பவரின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘சமரச யாத்ரிகா்’ என்ற நூலை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் சனிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

நான் உங்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு வெட்கமாக உள்ளது. தமிழக ஆளுநராக இருக்கும் நிலையில் தமிழை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அது இப்போது என்னுடைய மொழி; அடுத்தமுறை தமிழில் பேச முயற்சிக்கிறேன்.

Advertisement

Advertisement

இந்தப் புத்தகத்தை தில்லியில் ஹிந்தியில் வெளியிட்டேன். இப்போது தமிழக ஆளுநா் மாளிகையில் ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன்.

ஜாதி பிரச்னைகள் வளா்ந்ததற்கு ஆங்கிலேயா்கள்தான் காரணம்.

மக்கள் தங்களது பிரச்னைக்குத் தீா்வு காண ஆளுநா் மாளிகையை அணுகலாம். புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு மக்களுக்காகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கைகளை ஆளுநா் மாளிகையில் தெரிவிக்கலாம்; அதை தமிழக அரசிடம் தெரிவித்து நானும் அரசும் இணைந்து தீா்வு காண்போம்.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்களைக் கண்டறிந்து சரிசெய்ய முயற்சி செய்பவா்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் ஆளுநா் மாளிகையை அணுகலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் நூலாசிரியா் பிக்கு ராம்ஜி இடாதே, ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments