சமூகநீதி கணக்காய்வு: 46 ஆண்டுகால கோரிக்கைக்கு வெற்றி
தமிழகத்தில் சமூக நீதி கணக்காய்வு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது, 46 ஆண்டு கால சமூக நீதி கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்காய்வு நடத்தப்படும் என்று ஆளுநா் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகால சமூகநீதி கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஒரு மாநிலத்தின் வளா்ச்சியை உறுதி செய்ய அடிப்படைத் தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள்தான்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி என தெரிவித்துள்ளாா் அன்புமணி.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.