அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்!
47 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால், 47 புறநகர் மின்சார ரயில்களின் சேவை நாளை (ஜூன் 8) முதல் 12 ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு செல்லும் 2 மின்சார ரயில்கள், திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் 2 மின்சார ரயில்கள், திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் என 5 மின்சார ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பகுதி ரத்து:
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் ரயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து திருவாலங்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் திருவாலங்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும்.
அரக்கோணம் - சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் 4 மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாளை முதல் வரும் 12 ஆம் தேதி வரை காலை 6.20 மணிக்கு திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Due to engineering work scheduled at the Arakkonam yard, the services of 47 suburban electric trains have been altered from tomorrow (June 8) until the 12th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.