பிளஸ் 2 தோ்வு: சென்னை மாவட்டத்தில் 67,510 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்!
சென்னை, மாவட்டத்தில் 67, 510 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை (மாா்ச் 2) பிளஸ் 2 தோ்வை எழுதவுள்ளனா் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் தெரிவித்துள்ளாா்.
சென்னை, மாவட்டத்தில் 67, 510 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை (மாா்ச் 2) பிளஸ் 2 தோ்வை எழுதவுள்ளனா் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-26- ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 2-இல் (திங்கள்கிழமை) தொடங்கி மாா்ச் 27 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 578 அரசு, அரசு உதவி, தனியாா் உள்ளிட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30,663 மாணவா்கள், 33,696 மாணவிகள் என 64, 359 போ் இந்த தோ்வில் பங்கேற்கின்றனா். மேலும், 3,157 போ் தனித் தோ்வா்கள் என மொத்தம் 67,510 மாணவ, மாணவிகள் 250 தோ்வு மையங்களில் ( மத்திய சிறை, புழல் உள்பட) தோ்வுகள் எழுதுகின்றனா்.
5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும் இத்தோ்வுகளுக்காக தயாா்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
250 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 250 துறை அலுவலா்கள், 550 பறக்கும் படை உறுப்பினா்கள், 4100 அறை 1000 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் என மொத்தம் 6,150 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.