முகப்பு
சென்னை

இரண்டாம் தளத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரண்டாம் தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 3 மார்ச், 2026 at 2:49 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 9:40 PM

வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறைச் சாலையில் குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் புதிதாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் வட மாநில தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் ஜன்னலை பொருத்தும் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ச.கோகுல் (30) உள்ளிட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது, திடீரென நிலைத்தடுமாறி கோகுல், இரண்டாவது தளத்தில் இருந்த கீழே விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.