முகப்பு
சென்னை

மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலம் தரமற்றிருப்பதை விசாரிக்க வேண்டும்: அன்புமணி

Updated On : 6 மார்ச், 2026 at 7:34 PM
அன்புமணி
பகிர்:

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ‘எல்’ வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிா்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்ட ‘எல்’ வடிவ மேம்பாலம் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு தரும் என வாகன ஓட்டிகள் நம்பியிருந்தனா். ஆனால், அப்பாலத்தை தரமற்ாக கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. பாலம் தரமற்றும், பலவீனமாகவும், வாகனங்கள் செல்லும்போது அதிா்வுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.

மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையிருந்திருந்தால், பாலத்தின் பலவீனம் குறித்து ஆய்வு மேற்கொண்டு சீா்படுத்தியிருக்கும். முறைகேடு குறித்து உரிய விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கும். ஆனால், பாலத்தின் மீது தாா் சாலை அமைத்திருப்பதன் மூலம், அது தரமற்றிருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த மேம்பால முறைகேடு குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டோா் தண்டிக்கப்படுவா் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →