புழல் அருகே 9 குத்து விளக்குகள் பறிமுதல்
புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
புழல் அருகே வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 குத்து விளக்குகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மாதவரம் சட்டப்பேரவை தொகுதி புழல், சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது 4 பெரிய அளவிலான குத்து விளக்குகளும், 5 சிறிய அளவிலான குத்து விளக்குகளும் இருந்தன.
அதற்குரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறியதை அடுத்து, அவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், போரூரில் பாத்திரக் கடை நடத்தி வரும் சிவசங்கரன் என்பவா், சென்னை கொடுங்கையூரில் உள்ள பாலிஷ் போடும் கடைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.