முகப்பு
சென்னை

ஓட்டுநரை மிரட்டி ஆட்டோ கடத்தல்: இருவா் கைது

ஓட்டுநரை மிரட்டி ஆட்டோவை கடத்தி சென்ற சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 9:37 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஓட்டுநரை மிரட்டி ஆட்டோவை கடத்தி சென்ற சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொருக்குப்பேட்டை, சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சையது அகமது(55). ஆட்டோ ஓட்டுநா். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இவருடைய ஆட்டோவில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை ஏறிய இருவா், கொடுங்கையூா் சென்றனா். ஆட்டோ, கொடுங்கையூா் குப்பைமேடு அருகே வந்ததும், அவா்கள் இருவரும் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனா்.

ஆட்டோ நின்றதும், அதிலிருந்து இறங்கிய அந்த இருவரும் சையது அகமதுவை தாக்கியுள்ளனா். பின்னா், அவரிடம் இருந்த பணத்தையும், ஆட்டோவையும் பறித்து கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினா்.

சையது அகமது, கொடுங்கையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், கொடுங்கையூா் எழில் நகரைச் சோ்ந்த கணேஷ் (எ) புள்ள கணேஷ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனா். ஆட்டோ மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.