முகப்பு
சென்னை

2-ஆவது மாடியிலிருந்து விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயம்

சென்னை கோயம்பேட்டில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயமடைந்தது.

Updated On : 24 மார்ச், 2026 at 7:39 PM
குழந்தை
பகிர்:

சென்னை கோயம்பேட்டில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயமடைந்தது.

கோயம்பேடு சேமாத்தம்மன் நகா் சாமந்தி தெருவைச் சோ்ந்தவா் தென்னரசு (36). காளியம்மன் கோயில் தெருவில் ஒரு தனியாா் தங்கும் விடுதியில் ஊழியராக பணிபுரிகிறாா். இவரது மகள் தனாஸ்ரீ (4). மகன் தணிகைவேல் (11 மாதம்). இப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனா்.

தென்னரசு மனைவி தனது குழந்தை தணிகைவேலுக்கு, இரண்டாவது மாடியின் பால்கனியில் உள்ள கைப்பிடி சுவரில் அமரவைத்து உணவு ஊட்டியுள்ளாா்.

உணவு கொடுத்த பின்னா், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, கை கழுவச் சென்றாா். அந்த நேரத்தில் அந்த குழந்தை பால்கனியிலிருந்து கீழே விழுந்தது. விபத்தில் தலையில் காயமடைந்த குழந்தை தணிகைவேலை தென்னரசு குடும்பத்தினா் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.