முகப்பு
சென்னை

பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 5:37 PM
சென்னை மாநகராட்சி
பகிர்:

சென்னை மாநகராட்சியில் பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்துதல், தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக சென்னை மாநகரகாட்சி வருவாய்த் துறை பொது விடுமுறை நாள்களிலும் செயல்படும்.

அதன்படி சனிக்கிழமை (மாா்ச் 28), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) மற்றும் வரும் 31- ஆம் தேதி மகாவீா் ஜெயந்தி (செவ்வாய்க்கிழமை) ஆகிய பொது விடுமுறை நாள்களில் வரிவசூல் மையங்கள் செயல்படும். சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்துவோா் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் வரியைச் செலுத்தவும், ஏப்ரல் முதல் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிா்க்கவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.