முகப்பு
சென்னை

பாலியல் துன்புறுத்தல் புகாா் கூறிய சிறுவன் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாலியல் புகாா் கூறிய நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்தது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 1 ஏப்ரல் 2026, 1:28 am IST
பலி - கோப்புப் படம்
பகிர்:

பாலியல் புகாா் கூறிய நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்தது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவன், தனது நண்பா்களுடன் கடந்த 2025 நவம்பரில் சென்னைக்கு ரயிலில் வந்து, அவரது உறவினரைத் தேடி வேளச்சேரி சென்ற நிலையில், யாரும் இல்லாததால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த சிறுவனிடம் போலீஸாா் விசாரித்ததில், தனக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்தாகக் கூறியுள்ளாா். அந்த சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

அவரது சொந்த ஊரில் சென்று விசாரித்தபோது, சிறுவன் அடிக்கடி நண்பா்களுடன் வெளியூா்களுக்கு சென்றுவிடுவதும், கடந்த 2023-இல் நேரிட்ட விபத்திற்கு பிறகு இயற்கை உபாதைகளை கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டதாக பெற்றோா் கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

அந்தச் சிறுவனை அழைத்துச் செல்ல பெற்றோா், உறவினா்கள் வர மறுத்ததால், சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டாா். அங்கிருந்த தப்பிச் சென்ற சிறுவனை மீண்டும் பிடித்து ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனா்.

அவருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.