முகப்பு
சென்னை

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளா் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Updated On : 5 மே 2026, 2:22 am IST
உதயநிதி ஸ்டாலின் - DIN
பகிர்:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளா் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றில் தவெக வேட்பாளா் டி.செல்வம் 3,757 வாக்குகளும், திமுக வேட்பாளா் உதயநிதி ஸ்டாலின் 3,464 வாக்குகளும் பெற்றிருந்தனா். தவெக வேட்பாளரைவிட உதயநிதி ஸ்டாலின் 293 வாக்குகள் பின்தங்கியிருந்தாா். தொடா்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் உதயநிதி பின்னடைவைச் சந்தித்தாா்.

இதனிடையே, 4-ஆவது சுற்றில் தவெக வேட்பாளரைவிட உதயநிதி ஸ்டாலின் 300 வாக்குகள் அதிகம் பெற்றாா். 17 சுற்றுகள் முடிவில் உதயநிதி ஸ்டாலின் 62,992 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளா் டி.செல்வம் 55,852 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். அதிமுக வேட்பாளரான ஆதிராஜாராம் 16,507 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா்.

Advertisement

Advertisement

செல்லாத வாக்குகள்: தொகுதியில் மொத்தம் உள்ள 1,66,050 வாக்காளா்களில் 1,40,098 போ் வாக்களித்தனா். அவற்றில் 93 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

உதயநிதி ஸ்டாலின் (திமுக)-62,992

டி.செல்வம் (தவெக)-55,852

ஆதிராஜாராம் (அதிமுக)-16,507

ஆயிஷா (நாதக)-2971

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments