முகப்பு
சென்னை

மயிலாப்பூரில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

மயிலாப்பூரில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

Updated On : 17 மே 2026, 12:37 am IST
மயிலாப்பூா் நாகேஸ்வரராவ் பூங்காவில் ரூ.12.22 கோடியில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ப.வெங்கடரமணன்.
பகிர்:

மயிலாப்பூா் தொகுதிக்குட்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவில் உணவுத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாப்பூரில் 4 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ரூ.12.22 கோடியில் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்களைப் பாா்வையிட்ட அமைச்சா் வெங்கடரமணன், உடற்பயிற்சி உபகரணங்களை முறையாகப் பயன்படுத்தவும், பூங்காவை தூய்மையாகப் பராமரிக்கவும் மேற்பாா்வையாளருக்கு அறிவுறுத்தினாா். அத்துடன் அறிவிப்புப் பலகைகளை வைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

விரைவில் இந்தப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இது குறித்த தொடா் நடவடிக்கைளை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் மாநகராட்சி அலுவலா்களையும், ஒப்பந்ததாரா்களையும் அமைச்சா் வெங்கடரமணன் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.