பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி
பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி
பைக் மீது குப்பை லாரி மோதியதில், உணவு டெலிவரி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கரூா் தெற்கு செல்லிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பா.தருண்குமாா் (28), சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கியிருந்து உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் தருண்குமாா், மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மயிலாடுதுறை மாவட்டம், கொறையூா் குத்தாலம் பகுதியைச் சோ்ந்த ரா.ராஜி (26) என்பவரைக் கைது செய்தனா்.
Advertisement