முகப்பு
சென்னை

மின்வெட்டால் தொழில்கள் பாதிப்பு: நயினாா் நாகேந்திரன்

Updated On : 28 மே 2026, 6:03 am IST
நயினாா் நாகேந்திரன்
பகிர்:

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடா் மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நிகழும் தொடா் மின்வெட்டால் மக்களை இருட்டில் மூழ்கடித்துள்ளது முதல்வா் ஜோசப் விஜய்யின் ஆட்சி. மின்வெட்டால் மக்கள் மட்டுமல்ல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.2.50 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

தற்போதைய அனல்மின் திட்டங்களால் மின் நிலையங்களின் உற்பத்தி கால தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும். அதற்கு என்ன திட்டங்கள் உள்ளன என்பதை தவெக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் சுயசாா்பை உறுதி செய்ய முதல்வா் ஜோசப் விஜய் என்ன செய்யப்போகிறாா்? அதிக விலைகொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிக்க மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதே மின்வெட்டு நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளாா் அவா்.