உத்தரமேரூர் ஒன்றியம், அரசாணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி ஊராட்சி மன்றத் தலைவர் முருவம்மாள் செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். இயற்பியல் கண்காட்சி அறையை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பச்சையப்பன் திறந்து வைத்தார்.
வேதியியல் கண்காட்சி அறையை களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சிவக்குமார் திறந்து வைத்தார்.
உயிரியல் கண்காட்சி அறையை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சே.ஜீலியட் திறந்துவைத்தார்.
கணினி கண்காட்சி அறையை வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமாபதி திறந்துவைத்தார்.
ஆசிரியர் பயிற்றுநர் ரவிக்குமார், களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் டி.அந்துவனிதா, இரா.லீலாவதி, மலர் பவானி, புவனேஸ்வரி, அனுசுயா ஆகியோர் செய்திருந்தனர்.
மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தல், காற்றுக்கு எடை உண்டு, காய்கறியிலிருந்து மின்சாரம் தயாரித்தல், பினாயில், சாம்பிராணி, மெழுகுவர்த்தி ஆகியவற்றை மாணவர்களே தயாரித்துக் காட்டினர்.
கண்காட்சியை, காட்டுப்பாக்கம் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனல்லூர் தொடக்கப் பள்ளி, அத்தியூர் மேல்தூளி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
பள்ளி மாணவர்கள் அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டினர்.
பட்டதாரி ஆசிரியர் சி.குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.