காஞ்சிபுரம்

ஜெயலலிதா படம் பயன்படுத்தத் தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

அரசு விளம்பரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு 3 வார காலத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என, கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து, அரசு விளம்பரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்து ஊடகங்களுக்கு வழங்கிய அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா படம், பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் அவரது சொந்த பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை விளம்பரங்களில் வெளியிட , பயன்படுத்தலாம்.
ஆனால், அரசோ, அரசு அதிகாரிகளோ மக்கள் வரிப்பணத்தைத் தவறாக பயன்படுத்தக்கூடாது. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த மனுவுக்கு 3 வார காலத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT