காஞ்சிபுரம்

இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு-2017 புத்தகம்: மத்திய அமைச்சர் வெளியிட்டார்

தினமணி

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு-2017 புத்தகத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜவர்தன்சிங்ரத்தோர் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ஷர்மிஸ்தா பட்டாச்சாரி மற்றும் பாலின கல்வித் துறை பேராசிரியர் கோபிநாத் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதன்முதலாக இளைஞர் மேம்பாட்டு குறியீட்டினை தேசிய அளவில் தயாரித்து அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு-2017 தயாரித்துள்ளது. இந்தப் புத்தகத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜவர்தன்சிங் ரத்தோர் திங்கள்கிழமை தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலத்துறை செயலர் அமரேந்திரகுமார்துபே, ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மதன்மோகன்கோயல், இணைச் செயலர் கிரண்சோனிகுப்தா ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதன் மூலம் பல்வேறு துறைகளில் இளைஞர் சார் திட்டங்களை வகுக்கவும், கண்காணிக்கவும் முக்கியப் பங்காக அமையும் எனவும், உலகஅளவில் இளைஞர் மேம்பாட்டுக்கான ஒப்பீடுகளையும் மண்டல மற்றும் மாநில அளவில் ஒப்பீடு செய்யவும் இக்குறியீடு முக்கியக் கருவியாக விளங்கும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி பின்னடைவு

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை!

தென்சென்னையில் தமிழச்சியும், தூத்துக்குடியில் கனிமொழியும் முன்னிலை!

பிரதமர் மோடி பின்னடைவு!

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

SCROLL FOR NEXT