காஞ்சிபுரம்

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்: சீரமைக்கக் கோரிக்கை

DIN

மதுராந்தகத்தை அடுத்த தாதங்குப்பம் செல்லும் பாக்கம் ஏரிக்கரைச் சாலையில், கடந்த ஆண்டு வர்தா புயலின்போது சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் சீரமைக்கப்படாமலே உள்ளன. 
மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் ஏரிக்கரை மண் சாலை வழியாக புலிக்கொரடு, தாதங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் மதுராந்தகம், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். 
இந்நிலையில், பாக்கம் ஏரிக்கரை மீது அமைந்துள்ள 2 மின் கம்பங்கள் கடந்த 2016-இல் வீசிய வர்தா புயலின்போது சாய்ந்தன. இதனால் அந்த வழியாகச் செல்லும் நபர்கள் மீது எந்த நேரத்திலும் விழலாம் எனவும், அந்த மின்கம்பங்களின் இணைப்பில் உள்ள கம்பியில் மின் விநியோகம் இருப்பதால், அவ்வழியே செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
இதுகுறித்து மதுராந்தகம் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்தச் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தெரு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் வருவோர் இருளில் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்சமயம் பெய்து வரும் மழையால், மண் சாலை குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது.
எனவே இந்த மண் சாலையைச் சீரமைத்து, தார்ச் சாலை அமைக்கவும், சாய்ந்து போன மின்கம்பங்களை நிலைநிறுத்தி, மின்விளக்குகளை பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT