முகப்பு
காஞ்சிபுரம்

சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி ஊழியர்களுக்கு பரிசு

உத்தரமேரூர் பேரூராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி

Updated On : 26 டிசம்பர் 2018, 3:15 am IST
தூய்மைப் பணியாளருக்கு நினைவுப் பரிசு வழங்கிய நீதிபதி சச்சிதானந்தம்.
பகிர்:


உத்தரமேரூர் பேரூராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் துப்புரவுப் பணியாளர்களும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சார்பில் பசுமை நண்பர்களும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியாளர்கள் நாள்தோறும் உத்தரமேரூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீதியெங்கும் சென்று குப்பைகள் சேகரிப்பர். அது மட்டுமின்றி, குப்பைகளைத் தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்காகவும் அனுப்பிவிடுவர். வீடு வீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமலிருக்க அறிவுரைகள் வழங்குவதோடு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 
இவ்வாறு சிறப்பாகப் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பசுமை நண்பர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இவ்விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, உத்தரமேரூர் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் பங்கேற்று, நினைவுப் பரிசுகளை வழங்கினார். 
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், தூய்மைப் பணியாளர்களின் சேவையால் உத்தரமேரூர் பேரூராட்சி தூய்மையாக உள்ளது. இச்சேவையைத் தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, பேரூராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments