காஞ்சிபுரம்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

DIN


கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், கஜா புயலால் ஏற்படக் கூடிய வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அரசு அதிகாரிகள் மற்றும் முதல்நிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) குணசேகரன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கஜா புயலால் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைகள், வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படும் நபர்களைத் தங்க வைக்க வேண்டிய இடங்கள், அவர்களுக்கான நிவாரண உதவிகள் எவ்வாறு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டத்தில், வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட முதல்நிலை தன்னார்வலர்களிடம், கிராமப் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (சிப்காட்) விமலா, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டேயன், தனி வட்டாட்சியர் கவிதா, துணை வட்டாட்சியர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசுமதி (ஸ்ரீபெரும்புதூர்), சந்திரபாபு (குன்றத்தூர்), தீயணைப்பு மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT