காஞ்சிபுரம்

செங்கல்பட்டு கோயில்களில் முருகனுக்கு சாந்தி உற்சவம்

DIN


செங்கல்பட்டு நகரில் உள்ள கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழாவின் நிறைவாக வியாழக்கிழமை மாலையில் முருகப் பெருமானுக்கு சாந்தி உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு பெரியநத்தம் கைலாசநாதர் கோயிலில் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார். ஆறாம் நாள் செவ்வாய்க்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சியும், ஏழாம் நாள் புதன்கிழமை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன. இதையடுத்து, வியாழக்கிழமை சாந்தி உற்சவம் நடைபெற்றது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், விழாக் குழுவினர் மற்றும் பெரியநத்தம் பொதுமக்கள் செய்திருந்தனர். 
இதேபோல், செங்கல்பட்டு வ.உ.சி. தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், ஜிஎஸ்டிசாலை சக்திவிநாயகர் கோயில், அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகர்கோயில், ஆத்தூர் முக்தீஸ்வரர் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், காட்டுநாயக்கன் தெரு மலை மீது அமைந்துள்ள செம்மலை வேல்முருகன் கோயில், இருங்குன்றம் பள்ளி பாலமுருகன் கோயில், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயில், பழவேலி வியாக்ரபுரீஸ்வரர் கோயில், புலிப்பாக்கம் வேதாந்தீஸ்வரர் கோயில், என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன. 
விழாவில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர், சொர்ணாபிஷேகம் என சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு அலங்காரத்திலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்திப் பாடல்கள், ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளும் சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்பட்டன.
வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமிக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் காட்சியளித்தார். கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் மற்றும் முருகப் பெருமானுக்கு நடைபெறும் சாந்தி உற்சவம் ஆகியவற்றை தரிசிப்போருக்கு எண்ணியதெல்லாம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT