காஞ்சிபுரம்

"தாமிரவருணி மகிமை': நூல் வெளியீட்டு விழா

தினமணி

"தாமிரவருணி மகிமை' எனும் நூலை காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை வெளியிட்டார்.
 நிகழாண்டு நெல்லை தாமிரவருணியில் நடைபெற்று வரும் புஷ்கரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, "தாமிரவருணி மகிமை' என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்ச்சி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், சங்கர மட பீடாதிபதி விஜயேந்திரர் கலந்துகொண்டு அந்த நூலை வெளியிட்டார். வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன், ஆடிட்டர் சுபஸ்ரீ ஸ்ரீதர், அல்லயன்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஆகியோருக்கு பிரதிகளை அளித்து, விஜயேந்திரர் அருளாசி வழங்கினார்.
 பி.என்.பரசுராமன் எழுதியுள்ள இந்த நூலில், தாமிரவருணி நதி உருவான வரலாறு, அதன் கரையில் உள்ள திருத்தலங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT